விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு முன்ஜாமீன் கோரி ராஜிவ் சக்சேனா மனு

புதுடெல்லி:  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது  பிரிட்டனைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடி மதிப்பில் 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு விமானப்படை ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.423 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்றது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை சார்பில் தனியாக ஒரு வழக்கு பதியப்பட்டது. துபாயைச் சேர்ந்த யூஹெச்ஒய் சக்சேனா மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்கு லஞ்ச பணம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,   இரு நிறுவனங்களின்  இயக்குனர் ராஜிவ் சச்சேனாவிற்கு சட்டவிரோத பண பரிவர்த்தனையில் தொடர்புள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில்  தனது வழக்கறிஞர் மூலமாக ராஜிவ் சக்சேனா முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். சிறப்பு நீதிபதி அர்விந்த்குமார் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி, வருகிற 24ம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ராஜிவ் சக்சேனாவிற்கு பிணையில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: