திருவாரூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டையில் மின்சாரம், நிவாரணம் கோரி 4 இடங்களில் திடீர் மறியல்

மன்னார்குடி: கஜா புயல் கடந்து 1 மாதமாகியும் மின்சாரம், குடிநீர் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடாத அதிகாரிகளை கண்டித்து 4 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கஜா புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. 1 மாதத்தை கடந்தும் இடைச்சிமூலை, ஆவிடைதேவன் குளம்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை. சேதத்தை கணக்கீடு செய்வதற்கு கூட அதிகாரிகள் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில், உடனே மின் வசதி கொடுக்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும். பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைச்சிமூலை, ஆவிடைதேவன் குளம்  கிராமங்களை சேர்ந்த மக்கள் இரண்டு இடங்களில் மன்னார்குடி-முத்துப்பேட்டை இடையிலான மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதானத்துக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த பாண்டி அரசு உயர்நிலைபள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு பட்டியலில் பெயரில்லை என்று நிவாரண பொருட்கள் கொடுக்க அதிகாரிகள் மறுத்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த தாந்தாணி ஊராட்சி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி, அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில், எரிச்சியில் நேற்று காலை ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் தலைமையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள்  வராததால்,  சாலையில் சாமியானா பந்தல் போட்டு, அங்கேயே பானை வைத்து டீ போட்டு குடித்தனர். பின்னர் அதிகாரிகள் வந்து சமரசம் செய்து அனுப்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: