பிரெக்சிட் ஒப்பந்த விவகாரம்: பிரிட்டன் வேண்டுகோளை நிராகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்

பெல்ஜியம் : பிரெக்சிட் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யுமாறு பிரிட்டன் விடுத்த வேண்டுகோளை ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் தலைவர்கள் ஒன்று கூடி பிரெக்சிட் தொடர்பாக விவாதித்தனர். அப்போது பிரிட்டிஷ் எம்.பிக்களின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் தெரசா மே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரிட்டிஷ் எம்.பிக்களின் கவலைகளை தீர்க்க வேண்டியது நம் கடமை என்று கருதுவதாகவும், பிரெக்சிட் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது பிரிட்டன் அரசோ விரும்பவில்லை என்றும் கூறினார். எனினும் இருதரப்பையும் சேர்ந்த அனைவரும் திருப்தி கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தை உருவாக்குவதே சிறப்பான தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் பிரிட்டனின் வேண்டுகோளை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துவிட்டது.

மேலும் பிரிட்டன் எம்.பிக்களை சமாதானபடுத்த வேண்டிய பொறுப்பு தெரசா மேவையே சாரும் என்பது அவர்களின் கருத்தாகும். இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியதாவது, ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும், பல மாதங்கள் நீடித்த விவாதத்திற்கு பின் இறுதியான ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் இதற்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பதே சரியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். பிரெக்சிட் சிக்கலால் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மேவுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிராகரிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் இன்னும் நிறைவேறாத நிலையில், ஆளும் கட்சி எம்எல்ஏக்களே அதனை எதிர்ப்பதால் தெரசா மேவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: