கஜா புயல் தாக்கி 25 நாட்களாகியும் புஷ்பவனம் குடியிருப்புகளில் அகற்ற முடியாத கடல் சேறு

வேதாரண்யம்: கஜா புயலால் வேதாரண்யம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புஷ்பவனம் மீனவர் கிராமத்தில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வீடுகள் மற்றும் மீன்பிடி படகுகள் வலைகள் கடுமையான சேதம் அடைந்தது. புயல் வீசியபோது கடலில் இருந்து காற்று, கடல்நீர், சேறு கலந்து ஒரே நேரத்தில் புஷ்பவனம் மீனவர் கிராமத்திற்குள் புகுந்தது. விடிய, விடிய அடித்த காற்று அதிகாலையில் நின்றுவிட்டது. கடலில் இருந்து ஊருக்குள் 1 கிலோ மீட்டர் தூரம் 5 அடி உயரத்திற்கு சேறு நிரம்பிவிட்டது. சேற்றில் சிக்கி 50க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் லட்சக்கணக்கான வலைகள் காணாமல் போய்விட்டது. 50க்கும் மேற்பட்ட படகுகள் காற்றின் வேகத்தால் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்துள்ளது. தமிழக அரசு சார்பில் 2 இயந்திரங்களை கொண்டு சேற்றை அகற்றும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. சேற்றை அகற்றும் பணி மிக சிரமமானது.

முதல் கட்டமாக கடற்கரைக்கு செல்ல கூடிய சாலைகளில் உள்ள சேற்றை அகற்றி உள்ளனர். பாதிக்கப்பட்ட படகுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை இன்னமும் எங்கள் கிராமத்திற்கு கிடைக்கவில்லை. நிவாரண தொகையை கொண்டு புதிய படகு வாங்க முடியாது. கூடுதல் தொகையை வழங்க வேண்டும்.  சேற்றை அகற்றும் இயந்திரங்கள் இன்னும் கூடுதலாக பணியில் அமர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை அரசு சரிசெய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: