மத்திய ஆட்சியை அப்புறப்படுத்த மெகா கூட்டணி அமையவேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மத்தியில் நடைபெறும் பாசிச, மதவெறி பிடித்த மோடி தலைமையிலான ஆட்சியை அப்புறப்படுத்த மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். டெல்லி சென்று திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் அளித்த பேட்டி: நாட்டில் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி காங்கிரஸ் தலைமையில்  கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குன சமுதாய மக்கள், சிறுபான்மையினர், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதையும் பற்றி விவாதித்தோம். விரிவான பொருளாதார வளர்ச்சி பற்றி பேசப்பட்டிருக்கிறது. எழுத்து உரிமை, பேச்சு உரிமை, அதற்குரிய சுதந்திரம் எல்லாம் இந்த மோடி அரசில் பறிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாஜ ஆட்சியில்லாமல் ஆர்எஸ்எஸ் ஆட்சியாகவும் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டம் நடந்தபோது, ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினமா செய்த தகவல் கிடைத்தது. மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் ராஜினமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நாட்டு பொருளாதாரத்தின் மீது நடந்தப்பட்டிருக்கிற சர்ஜிக்கல் ஸ்ரைக் என்ற நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.  ஒட்டு மொத்தமாக அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கிற சிறுசிறு பிரச்சனைகள், மனஸ்தாபங்களை ஒதுக்கி  வைத்து விட்டு மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, மதவெறி பிடித்திருக்கிற மோடி தலைமையில் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை  அப்புறப்படுத்தவதற்கான முயற்சியில் முழுமையாக ஒரு மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் என்று திமுக சார்பில் வெளிப்படுத்து இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: