லாட்ஜிக்கு காதலியை வரவழைத்து தாக்கிய சினிமா ஜிம் டிரைனர் கைது

ஆலந்தூர்: லாட்ஜிக்கு காதலியை வரவழைத்து தாக்கிய சினிமா ஜிம் டிரைனரை போலீசார் கைது செய்தனர்.  டிப்பாக்கம் அடுத்த மூவரசன்பட்டை சேர்ந்தவர் ஸ்டெல்லா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவன ஊழியர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தையா தினேஷ் (27). இவர் பழவந்தாங்கல், கபிலன் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி சினிமா நடிகர்களுக்கு ஜிம் டிரைனராக உள்ளார். ஒரே பகுதியில் வசிப்பதால் ஸ்டெல்லாவுக்கும், தினேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடையில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தினேஷ், ஸ்டெல்லாவுக்கு போன் செய்து தனது அறைக்கு வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி, ஸ்டெல்லா அங்கு சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ் ஸ்டெல்லாவை கன்னத்தில் சரமாரியாக அறைந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். காதலன் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த ஸ்டெல்லா பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, போலீசார்  தினேஷை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், தினேஷ் மீது மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் 8 வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து தினேஷை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: