அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: இடைத்தரகர் மைக்கேல் கோர்ட்டில் ஆஜர்

புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகர் மைக்கேல் கோர்ட்டில் ஆஜரானார். டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஐ.மு.கூ ஆட்சியின் போது வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர்கள் கொள்முதலில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இதையடுத்து துபாயில் பதுங்கி இருந்த இடைத்தரகர் மைக்கேலை சிபிஐ நேற்று இந்தியாவிற்கு கொண்டு வந்தது. மேலும் மைக்கேலை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: