அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை மணந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா

ஜோத்பூர்: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸ்க்கும் ராஜஸ்தான் ஜோத்பூரில் நேற்று திருமணம் நடந்தது.  கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றனர் பிரியங்கா சோப்ரா. அதன்பின் பாலிவுட் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடக்கத் தொடங்கினார். அப்போது தன்னைவிட 10 வயது குறைந்த, அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசுடன், பிரியங்கா சோப்ராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இவர்களது திருமண ஏற்பாடுகள் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஓட்டல் முழுவதும் திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டது. கிறிஸ்தவ பாராம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் நேற்று நடந்தது. இன்று இந்து முறைப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினர், பாலிவுட் பிரபலங்கள் உட்பட முக்கிய விருந்தினர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: