வைகுண்ட ஏகாதசியன்று சோதனை முறையில் திருமலையில் அட்டை பெட்டியில் லட்டு பிரசாதம் வினியோகம்

திருமலை: வைகுண்ட ஏகாதசியன்று சோதனை முறையில் அட்டை பெட்டிகளில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான இணை செயல் அலுவலர் கூறினார். திருமலையிலும் நவம்பர் 16ம் தேதிமுதல் பிளாஸ்டிக் பயன்படுத்ததடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து லட்டு வழங்க அட்டை பெட்டிகள் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  அதன்படி உலகளவில் முன்னுதாரணமாக தூய்மைக்கு முதலிடம் வகிக்கும் வகையில் 1, 2, 4 லட்டுகள்  வரை கொண்டு செல்லும் விதமாக லேமினேட் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

இவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு பக்தர்களின் வரவேற்பை பொறுத்து ஒட்டுமொத்தமாக இதனை கொள்முதல் செய்யப்பட உள்ளது. திருமலையில் உள்ள வியாபாரிகளும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அபராதமும் கடைகளுக்கும் வழங்கப்பட்டு லைசென்ஸ் ரத்து செய்யப்படும். மேலும், வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வரவுள்ளனர். அன்றைய தினம் சோதனை முறையில் அனைத்து பக்தர்களுக்கும் அட்டை பெட்டிகளில் லட்டு பிரசாதம் வழங்கப்படும். இதற்கு ஒத்துழைப்பு அளிக்காத ஊழியர்கள் மீது தேவஸ்தான அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: