உலக செஸ் போட்டி 4வது முறையாக கார்ல்சன் சாம்பியன்

லண்டன்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் கார்லசனை எதிர்த்து அமெரிக்காவின் பபியானோ கருணா போட்டியிட்டார். இருவருக்கும் இடையேயான 12 இறுதி ஆட்டங்கள் தொடர்ந்து டிராவில் முடிந்தன. இதுபோல் நடப்பது உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவே முதல் முறை. இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் ரேபிட் டைபிரேக் சுற்று நேற்று முன்தினம் லண்டனில் நடந்தது. அதிவிரைவு நேரக்கட்டுப்பாடு கொண்ட இந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் கார்ல்சன் வெற்றி பெற்று, 4வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு பரிசுத் தொகை ரூ.4.5 கோடி வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: