ஒரு அணை கட்டி தமிழகத்துக்கு வரும் முழுதண்ணீரையும் தேக்கி நிறுத்த கர்நாடகா சதி : மன்னார்குடி ரங்கநாதன் புகார்

மன்னார்குடி; மேகதாதுவின் குறுக்கே ஒரு அணையை கட்டுவதன் மூலம் தமிழகத்துக்கு வரும் முழுதண்ணீரையும் தேக்கி நிறுத்த கர்நாடகா சதி செய்வதாக மன்னார்குடி ரங்கநாதன் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் தற்போது புதிய அணையை மேகேதாட்டுவில் கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது. குடிநீர் தேவைக்காக இந்த அணையை கட்டுவதாக கர்நாடகம் கூறுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் இருந்த போது, மேகேதாதுவிலும், ஒகேனக்கலிலும் மின் உற்பத்திக்கு, சுமார் 5 டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அதை மறைத்து தற்போது கர்நாடகம் மேகேதாதுவின் வேறொரு இடத்தில் 66 டிஎம்சி கொள்ளளவுக்கு ஒரு அணை கட்ட முயற்சிக்கிறது. இதன் மூலம் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் முழுவதையும் தேக்கிநிறுத்திவிட அம்மாநிலம் திட்டமிட்டு சதி செய்வதாக தோன்றுகிறது. மேலும் தமிழக காவிரி டெல்டா பகுதிகள் புயல் தாக்கியதில் நிலைகுலைந்து போய் உள்ள நிலையில், அரசும், மக்களும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது மத்திய அரசு சப்தமில்லாமல் கர்நாடகத்தின் நடவடிக்கைக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. இதை விவசாயிகள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: