பாகிஸ்தானை சேர்ந்தவன் தேடப்பட்டு வந்த லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் :  லஷ்கர் தீவிரவாதி நவீத் ஜாட் உட்பட 2 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது. ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்துக்கு  உட்பட்ட குத்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் நேற்று அந்த கிராமத்தில் தீவிர ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அந்த வீட்டை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில், வீரர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு க்ெகால்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை வீரர்கள் கைப்பற்றினர்.

சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் ஒருவன் மூத்த பத்திரிக்கையாளர் புகாரி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நவீத் ஜட் என தெரிய வந்துள்ளது. இவன் கடந்த பிப்ரவரி 6ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவன். இவனை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று என்கவுன்டரில் கொல்லப்பட்டான். இது தொடர்பாக டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், “தீவிரவாதி நவீத், பாகிஸ்தானை சேர்ந்தவன். எனவே, அவனது சடலத்தை பாகிஸ்தான் எடுத்து செல்லும்படி தகவல் தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: