இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் பிளிப்கார்ட் நிறுவனத்தை முந்தியது அமேசான்

டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்து வந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தை தற்போது அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் முந்தியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. சுமார் 5 லட்சம் பணியாளர்களை கொண்ட அமேசான் நிறுவனம், உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் கடும் போட்டி ஏற்பட்டு வந்த நிலையில் அமேசான் தனது விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி மின்னணு பொருட்கள் முதல் பலசரக்கு வரை பல்வேறு பொருட்களை அமேசான் விற்பனை செய்து வருகிறது. சர்வதேச அளவில் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக வால்மார்ட் நிறுவனம் விளங்கி வருகிறது.

வால்மார்ட் நிறுவனமானது கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் பிளிப்கார்ட்டின் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கியது. இந்தியாவில் நீண்டகாலமாக சாதனையாளராக விளங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கும், அமேசான் நிறுவனத்திற்கும் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது ஆன்லைன் விற்பனையில் பிளிப்கார்ட் நிறுவனத்தை அமேசான் முந்தியுள்ளது. இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் இந்த ஆண்டு விற்பனையானது 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: