கஜா புயல் நிவாரணம் : மொய் விருந்து நடத்தி உதவிக்கரம் நீட்டும் வாஷிங்டன் தமிழர்கள்

வாஷிங்டன் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வாஷிங்டன் வட்டார தமிழர்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கஜா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்து வாடி வருகின்றனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர உலகின் பல்வேறு பகுதியில் இருந்து தமிழர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வாஷிங்டன் வட்டார தமிழர்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

வாஷிங்டன் நகரில் இருக்கும் ஏம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டைன் ஃ பார் கஜா என்ற பெயரில் உணவு விற்பனை செய்தனர். இதற்காக வாஷிங்டன் டிஸியில் இருக்கும் தமிழர்கள் 200க்கும் மேற்பட்டோர் உணவருந்தி நன்கொடை வழங்கி சென்றனர். இதற்காக சென்னை எக்ஸ்பிரஸ் உணவகம் இலவசமாக உணவு வழங்கியது. இதுவரை வேதாரண்யம் பகுதியில் இருக்கும் 7 கிராமங்களில் 650 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மேலும் 8 கிராமங்களுக்கு உதவி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். முன்னதாக மலேசிய வாழ் தமிழர்கள் நிதி உதவி திரட்டும் வகையில் பெருநடை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: