2 மணிநேரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டாசு வணிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டாசு வணிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பட்டாசுகளை கொளுத்தியும், பதாகைகளை ஏந்தியும், பட்டாசு வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல் மற்றும் செந்தமிழன், மதிமுக சார்பில் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற ஆணையால் சிவகாசியில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்றும் சிறப்பு சட்டம் இயற்றி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் பட்டாசு வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: