புதுக்கோட்டை மாவட்டத்தில் ராம்கோ, எம்சிஆர் நிறுவனங்கள் சார்பில் 25 லட்சம் நிவாரண பொருட்கள்: அமைச்சர் வழங்கினார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ராம்கோ, எம்சிஆர் ஆகிய நிறுவனங்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட உதவிப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கருப்பண்ணன் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் புயலால் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராம்கோ சிமெண்ட் நிறுவனம் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், MCR வேட்டி சட்டை நிறுவனம் 11இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை நாற்பது இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் லாரிகளில் அனுப்பி வைத்திருந்தன.

இந்த உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கந்தர்வக்கோட்டை அருகே புதுப்பட்டியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. தமிழகச் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: