இந்தியாவிற்காக NEIGHBOURLY என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம்

மும்பை : கூகுள் நிறுவனம் இந்தியாவிற்காக NEIGHBOURLY என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவோர் அன்றாட விஷயங்கள் பற்றிய விவரங்களை தங்கள் பகுதியில் வாழும் சக மனிதர்களிடம் இருந்தே பெற முடியும் என கூகுள் நிறுவனம்  தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு நகரங்களில் களம் இறங்கி உள்ள இந்த செயலி படிப்படியாக சென்னை, ஹைதரபாத் புனே, கொல்கத்தா, சண்டிகர், லக்னோ மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என கூகுள் கூறியுள்ளது.

ஆங்கிலம் மட்டுமல்லாது இந்திய மொழிகளில் ஹிந்தி, மராத்தி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகள் உள்ளடக்கிய கேள்விகளை NEIGHBOURLY செயலியால் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவின் மும்பை நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, தொடர்ந்து ஜெய்ப்பூர், அகமதாபாத், மைசூர், விசாகப்பட்டணம், கொச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் சோதனைக்கு உட்பட்டு வருகிறது.

இந்த செயலியை பயன்படுத்துவோர் தங்கள் பகுதியில் வாழும் சக மனிதர்களிடம் பகுதிச் சார்ந்த கேள்விகளை கேட்டு விடை அடைய முடியும். மேலும் ஒரு பகுதிக்குள் புதிதாக நுழையும் மனிதர்களுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த செயலியை அண்ட்ராய்டு 4.3 ஜெல்லிபீன் மொபைலில் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: