ட்விட்டர் சிஇஓயின் புகைப்பட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தது ட்விட்டர் இந்தியா

டெல்லி : பிராமணிய ஆதிக்கம் ஒழிக என வாசகம் கொண்ட பதாகையை ஏந்தி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸி பதிவிட்ட விவகாரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸி  கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அவர்களில் ஒருவர் பிராமணிய ஆதிக்கம் ஒழிக என்ற வாசகம் கொண்ட பதாகையை  ஜாக் டோர்ஸியிடம் கொடுத்தார். அந்த பதாகையை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படத்தை  ஜாக் டோர்ஸி ட்விட்டரில் பதிவிட்டார். இந்த நிலையில் உள்நோக்கத்துடன்  ஜாக் டோர்ஸி  செயல்பட்டதாக கூறி சமூக  வலைத்தளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ள விளக்கத்தில் அந்த பதாகை  ஜாக் டோர்ஸிக்கு பரிசாக அளிக்கப்பட்டது என்றும் அந்த கருத்தினை அவர் ஒப்புக் கொண்டு கையில் ஏந்தி இருக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: