ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு தண்டனை காலத்தை குறைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் மறுப்பு

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகிய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு தடைசெய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகமானது என்றும் சரியானதுதான் என்றும் பல கிரிக்கெட் விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு அந்நாட்டு கிரிக்கெட் வாரித்திடம் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு விதிக்கப்ட்ட தண்டனையைக் குறைக்குமாறு வலியுறுத்திருந்தனர். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் தண்டனைக் காலத்தைக் குறைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் மறுத்து விட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு ஓராண்டும், கேமரூன் பேன்கிராப்ட்-க்கு 9 மாதமும் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக் காலத்தைக் குறைக்குமாறு வீரர்கள் சங்கம் சார்பில், கிரிக்கெட் சங்கத்திடம் முறையிடப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை என்று கருதப்படுவதால் அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் நெருக்கடியில் உள்ளது. இருந்தபோதிலும் இவர்களுக்கான தண்டனைக் காலத்தைக் குறைக்க அந்நாட்டுக் கிரிக்கெட் சங்கம் மறுத்து விட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: