மவுன்ட் மவுங்காநுயி: இந்தியா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்துள்ளது. பே ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்திருந்தது. விஜய் 28, பிரித்வி ஷா 62, அகர்வால் 65, ஹனுமா விஹாரி 86 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். பார்திவ் 79 ரன்னுடன் களத்தில் இருந்தார். நேற்று நடந்த 2ம் நாள் ஆட்டத்தில், இந்தியா ஏ 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது.