ஏடிபி உலக டூர் பைனல்ஸ் : 15வது முறையாக அரை இறுதியில் பெடரர்

லன்டன்: ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் அரை இறுதியில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 15வது முறையாக தகுதி பெற்றார். லண்டன் O2 அரங்கில் நடைபெறும் இந்த தொடரில், ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் 2 பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதி வருகின்றனர். ஹெவிட் பிரிவில் இடம் பெற்றுள்ள பெடரர் தனது முதல் போட்டியில் ஜப்பானின் கெய் நிஷிகோரியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 2வது லீக் ஆட்டத்தில் டொமினிக் தீமுடன் (ஆஸ்திரியா) மோதிய அவர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.

Advertising
Advertising

இந்த நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன் மோதிய பெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். உலக டூர் பைனல்ஸ் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர், 15வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹெவிட் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த பெடரர், ஆண்டர்சன் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: