கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்தது : வானிலை மையம்

சென்னை : கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்தது என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். கஜா புயலின் கண் பகுதி 26 கி.மீ. விட்டம் கொண்டது. நிலப்பகுதியில் கஜா புயல் கரையை கடக்க தொடங்கியதால் அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்த்திசையில் பலத்தகாற்று வீசக்கூடும் என்று தெரிவித்தார்.மேலும் புயல் முழுமையாக கரையை கடக்கும் வரை, வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். காரைக்காலில் கஜா புயலால் வீசும் காற்றின் வேகம் 100 கிலோ மீட்டராக பதிவாகியுள்ளது. வேதாரண்யத்தில் சூறாவளி காற்று தாண்டவமாடியுள்ளது.

கடல்நீர் ஊருக்குள் புகுந்தது..

நாகை மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது. புயல் காற்றில் 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

கடலூரில் மரங்கள் முறிந்தன..

கடலூர் மாவட்டம் போண்டூரில் பலத்த காற்று காரணமாக சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தது. சாலையில் முறிந்து விழுந்த மரங்களை உடனடியாக அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் நாகை மாவட்டத்தில்  ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன, ஏராளமான இரு சக்கர வாகனங்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: