காரைக்குடி அருகே இந்தோனேசியா பெண்ணை தமிழக வாலிபர் மணந்தார் : அம்மி மிதித்து, மாலை மாற்றி திருமணம்

காரைக்குடி:  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூரை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கார்த்திகேயன். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அதே கம்பெனியில் இந்தோனேசியாவை சேர்ந்த பெரிலிஸ் பணியாற்றுகிறார். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று பள்ளத்தூரில் உள்ள மணமகன் இல்லத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தமிழக பாரம்பரிய முறைப்படி தாலி கட்டி, அம்மி மிதித்து, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதில் கார்த்திகேயனின் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

விசா பிரச்னை காரணமாக பெர்லிஸ் உறவினர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. கார்த்திகேயன் கூறுகையில், ‘‘7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். நமது பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய பெர்லிஸ் விரும்பினார். அங்குள்ள கலாச்சாரமும், நமது கலாச்சாரமும் முற்றிலும் மாறுபட்டது’’ என்று தெரிவித்தார். பெர்லிஸ் கூறுகையில், ‘‘தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை மாற்றி பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்தது மனதிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: