வலுவிழந்த புயலாக கஜா புயல் நவம்பர் 15ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு : தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை : கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கஜா புயல் ஒரு விசித்திரமான சுழற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், திறந்த கடல் பகுதியில் புயல் செல்லும் போது அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் புயல் கரையை கடக்கும் போது வலுவிழந்து விடும் என தெரிவித்துள்ளார்.கஜா புயல் கடலூர் - வேதாரண்யம் இடையே நவம்பர் 15ம் தேதி கரையை  கடக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.வர்தா புயல் போன்றோ, தானே புயல் போன்றோ நாம் பயப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். கஜா புயல் கரையை கடக்கும் போது மிகவும் வலுவிழந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் எதிர்பாராத விதமான சுழற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் வரும் 15ம் தேதி புயல் கடலூர் - வேதாரண்யம் இடையே கரையை கடக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் சில வரைபடங்களை பார்க்கும் போது இந்த புயல் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை நவம்பர் 14ம் தேதி இரவு முதல் மழை பெய்ய தொடங்கும் என்றும் சென்னை நகர் மற்றும் புறநகரில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயல் கரையை கடக்கும் போது தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மேலும் கடலோர மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 60முதல் 80கி.மீ காற்று வீச கூடும் என்றும் சில சமயங்களில் காற்றின் வேகம் 90கி.மீ வீசும் என்றும் தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக இது வர்தா புயல் போன்றோ, தானே புயல் போன்றோ ஒரு அதிதீவிர புயல் அல்ல என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 15நாட்கள் தமிழகத்திற்கு மழை பெய்ய கூடிய வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளார். குறைந்த காற்று அழுத்தம் ஒன்றன் பின் ஒன்றாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: