அமெரிக்காவின் சான் டியகோ உயிரியல் பூங்காவில் விளையாடிச் சுற்றித் திரியும் 2 குட்டி யானைகள்

அமெரிக்கா: அமெரிக்காவின் சான் டியகோ உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு யானைக் குட்டிகள் ஒன்றையொன்று முட்டியும் மோதியும் விளையாடிச் சுற்றித் திரிந்து பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் சாண் டியகோ உயிரியல் பூங்காவில் மொத்தம் 14 யானைகள் உள்ளன. இவற்றில் 4 பெரிய யானைகளாகும். 10குட்டி யானைகளாகும்.

பிறந்து 3 மாதங்களான சூலி என்னும் ஆண் குட்டியும், பிறந்து 2 மாதங்களான கையா என்னும் பெண் குட்டியும் ஒன்றையொன்று முட்டியும் மோதியும் ஏறியும் விளையாடிச் சுற்றித் திரிகின்றன. தாய் யானைகளின் கண்காணிப்பில் இந்தக் குட்டிகள் விளையாடும் விளையாட்டு பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: