பாலஸ்தீனம் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹாமாஸ் இயக்கத்தின் தொலைகாட்சி நிறுவனம் தகர்ப்பு

பாலஸ்தீனம்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹாமாஸ் இயக்கத்தின் தொலைகாட்சி அலுவலகம் தகர்க்கப்பட்டது. ஹாமாஸ் போராளி குழு சார்பில் அல் அக்ஸா என்ற பெயரில் தொலைகாட்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதற்கு கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு காஸா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேலிய போர் விமானங்கள் அல் அக்ஸா நிறுவனத்தின் மீது சரமாரியாக குண்டு வீசி தாக்கினர்.

இதில் அந்த நிறுவனத்தின் கட்டடம் தரைமட்டம் ஆனது. அல் அக்ஸா தொலைகாட்சி அடுத்த வாரம் முதல் தனது ஒளிப்பரப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: