திண்டுக்கல்லில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் நெதர்லாந்து மிளகாய் : விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குறைவான தண்ணீரில் விளைவிக்கப்படும் நெதர்லாந்து மிளகாய்க்கு விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை  குடில் அமைத்து அதில் பல வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் நெதர்லாந்து ஹாட் பெப்பர் வகை பச்சை மிளகாயை முதல் முறையாக இங்குதான் வளர்க்கப்படுகிறது. கப்பிப், தண்டர், ரும்ப்லீ, குர்ட்லஸ் உள்ளிட்ட ஐந்து வகை மிளகாய்களை சாகுபடி செய்கின்றனர்.

500 சதுர அடியில் ஆயிரம் செடிகளை சோதனை முறையில் நடவு செய்கின்றனர்.இந்த மிளகாய் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டது எனக் கூறப்படுகிறது. மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் 120 நாட்களில் மிளகாய் அதிக மகசூல் கிடைக்கும். ஒரு மிளகாய் 20 செமீ வரை வளரும். காரத்தன்மை குறைவு, பூச்சி  தாக்குதல் இருக்காது, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டவையாகும். சாதாரண மிளகாயை விட நெதர்லாந்து மிளகாய் இரு மடங்கு மகசூல் தரும் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த மிளகாய் நாற்றுகளை விவசாயிகள் பெருமளவு வாங்கிச் செல்கின்றனர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: