கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க சவுதி அரேபியா திட்டம்

அபுதாபி : சவுதி அரேபியா அடுத்த மாதத்தில் இருந்து அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க இருப்பதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் காலித் அல் ஃபலி,  தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.

இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி ஆலோசனை தெரிவித்துள்ளார்.இதனிடையே அபுதாபியில் எண்ணெய் விலை சரிவை ஈடுக்கடடும் வழிகள் குறித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டத்திற்கு பிறகு எரிசக்தித் துறை அமைச்சர் காலித் அல் ஃபலி பேசினார்.

அப்போது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம் என்று கூறினார். இதனிடையே சவுதி அரேபியா அடுத்த மாதத்தில் இருந்து அதன் எண்ணெய் ஏற்றுமதியை நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க இருப்பதாக உறுதி அளித்தார். ஈரானிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் தேவைக்கு அதிகமாக எண்ணெய் விற்பனைக்கு வருவது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: