பாரீசில் உள்ள முதலாம் உலகப் போர் நினைவிடத்தில் அஞ்சலி: வெங்கையா நாயுடு பங்கேற்பு

பாரீஸ்: முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான நேற்று பாரீசில் உள்ள நினைவிடத்தில் உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1914ம் ஆண்டு தொடங்கிய முதலாம் உலகப் போர் 1918ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் தொடர்ந்தது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.8 கோடி படை வீரர்கள் பலியாயினர். இந்தியாவில் இருந்து 8 லட்சம் வீரர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக போரில் பங்கேற்றனர். இவர்களில் 47,746 வீரர்கள் பலியாயினர். 65,000 பேர் காயமடைந்தனர். பேரழிவை தந்த முதலாம் உலகப் போர் நிறைவடைந்து நேற்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின.

இதையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஆர்க் டி டிராம்பியோ போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள வெங்கையா நாயுடு, நேற்று முன்தினம் வடக்கு பிரான்சில் இந்தியா சார்பில் முதல் முறையாக கட்டப்பட்ட போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்து, முதலாம் உலகப் போரில் பலியான ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: