மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் : பயணிகள் பாதிப்பு

மும்பை : ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் மும்பை விமான நிலையத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கிருந்து விமானங்கள் புறப்படுவது தாமதமாகியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டின் ஒப்பந்த ஊழியர்கள் நேற்றிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே வேலைநிறுத்தால் பணிகள் முடங்கியுள்ளதால் மும்பையில் இருந்து பிற நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுச் செல்வது தாமதமாகியுள்ளது. இதனால் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் பலமணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து விளக்கமளித்த ஏர் இந்தியா செய்தி நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் இந்த விமான சேவையை சீர்செய்வதற்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் அளித்துள்ளது. மும்பையில் இருந்து செல்லும் விமானங்கள் தாமதமாகியுள்ளதால், ஏர் இந்தியாவின் நிரந்தர ஊழியர்கள் இந்த நிலையை சுலபமாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 2 மணி நேரம் தாமதமாக மும்பையில் இருந்து அதிகாலையில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: