பண மதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட சீரழிவு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  அறிவுறுத்தலின் பேரில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3ம் ஆண்டின் தொடக்க நாளை முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து  மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமை சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, மாவட்டத்  தலைவர்கள் வரும் 9ம்தேதி அன்று  காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்கள் கட்சி அமைப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டங்களை நடத்திட கேட்டுக்கொள்கிறேன்.

 சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில், எனது தலைமையில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வரும் 9ம்தேதி காலை  11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய் தத்,  வெல்ல பிரசாத் மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரிவு தலைவர்கள் கூட்டம்

அவரது அறிக்கையில் மேலும் கூறுகையில், ‘‘ வரும் 9ம்தேதி நடைபெறுவதாக இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மண்டல மாவட்டத் தலைவர்கள்,  பார்வையாளர்கள், பிரிவுகள் மற்றும் துறைகளின் மாநிலத் தலைவர்கள் கூட்டம் மேற்கண்ட காரணங்களால் ஒத்திவைக்கப்படுகின்றது. ஒத்திவைக்கப்பட்ட  அக்கூட்டம் வரும் 12ம்தேதி திங்கட்கிழமை காலை 10.25 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும்’’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: