டெங்கு பலியை தடுக்க போர்க்கால நடவடிக்கை: முத்தரசன் கோரிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் காரணமாக ஒவ்வொரு நாளும் உயிர்ப்பலி அதிகரித்து உள்ளது மிகுந்த கவலையளிக்கின்றது. பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட தினசரி பலி  எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.சென்னை, சேலம், திருவள்ளுர், மதுரை, கடலூர், நெல்லை, திருப்பூர், விழுப்புரம் என அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் எல்லா இடங்களிலும் பரவி, உயிர்களை பலி வாங்கி வரும் செய்திகள் நாள்  தவறாமல் நாளேடுகளிலும், தொலைக் காட்சிகளிலும் முதன்மை செய்திகளாக வருகின்றது.

இந்த நேரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என கூறுவது விந்தையாக உள்ளது.தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொண்டு, மனித உயிர்களை காக்க, தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: