பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக, 10 மாதங்களில் 352மிமீ மழையே பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் குளிர்கால மழையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 28மிமீ, கோடைகால மழையாக மார்ச், எப்ரல், மே மாதங்களில் 91.மிமீ, தென்மேற்குப் பருவமழையாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் 314மிமீ, வடகிழக்கு பருவமழையாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 475மிமீ என ஆண்டு தோறும் சராசரியாக 908மிமீ மழை பெய்யக்கூடிய வறண்ட பகுதியாகும்.
கடந்த 20ஆண்டுகளில் 1999ல் 1176.52மிமீ, 2000ல் 1014.96மிமீ, 2004ல் 960.09 மிமீ, 2005ல் 1312.80மிமீ, 2008ல் 1014.04மிமீ, 2010ல் 1097மிமீ, 2011ல் 1072.20மிமீ, 20 15ல் 1109.34மிமீ, 2017ல் 984.10மிமீ என 9முறை சராசரி மழையளவைக் காட்டிலும் மிக அதிகப்படியாகப் பெய்துள்ளது. 700மிமீ அளவுக்கும் குறைவாக 2001ல் 648.83மிமீ, 2002ல் 611.07மிமீ, 2012ல் 608.78மிமீ, 2016ல் 20ஆண்டுகளில் மிகவும்குறைவாக 512.84 மிமீ மழையும் பெய்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கணக்கிட்டால் மிகக்குறைந்த மழையாக நடப்பாண்டு 10மாதங்களில் 352மிமீ மழையே பெய்திருப்பது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டு சராசரிமழையளவான 908மிமீ மழையில் 10மாதங்களில் 605மிமீ மழைபெய்தி ருக்க வேண்டும். சராசரி மழையிலேயே 253மிமீ மழைபெய்யாமல் ஏமாற்றியுள்ளது. இதனால் சராசரியாக 475மிமீ பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழையை பெரம்பலூர் மாவட்டம், பெரிதும் நம்பியிருந்தது. அதிலும் ஆரம்பமே ஏமாற்றமாக அக்டோபர் மாத த்தில் சராசரியாகப் பெய்யவேண்டிய 172.00மிமீ மழைக்குப்பதிலாக நடப்பு அக்டோப ரில் 67மிமீ மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் 1ம்தேதிமுதல் வடகிழக்கு பருவமழை பெய்யுமென தெரிவித்த வானிலை ஆய்வு மையத்தைநம்பி, வானம் பார்த்த விவசாயிகள் நேற்று மழைக்காக காத்திருந்தனர். நேற்று கருமேகங்கள் திரண்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக ஊருக்கு ஊர் சாரல் மழையோடு ஏமாற்றிவிட்டது. நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதிவரை 352 மிமீ மழைதான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இனி எவ்வளவு பெய்தாலும் சராசரி மழை அளவைத் தாண்ட முடியாது. அதனைத்தாண்டி பேய்மழை பெய்து அதிசயம் நிகழ்ந்தால்தான் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி இழப்பை சரி செய்யமுடியும், இல்லாவிட்டால் நடப்பாண்டும், 2016ல் வறட்சி நிவாரணம் கோரியது போல் விவசாயிகள் வறட்சிக்கும், பூச்சித்தாக்குதல்களுக்கும் நிவாரணம் கேட்டு போராடும் சூழல் தான் ஏற்படும் என வேதனையுடன் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி