மன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டம்

மும்பை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் உள்ளே அரபிக் கடலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு, குதிரைமீது சிவாஜி அமர்ந்திருப்பது போல 210 மீட்டர் உயரத்துக்கு 3,600 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்க

மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சத்ரபதி சிவாஜியின் நினைவிடம் கட்டுமான பணிகளை பார்வையிட, கடந்த 24-ம் தேதி, மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 25 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். இதையடுத்து, சத்ரபதி சிவாஜி நினைவிடத்தை தரைப்பகுதியில் அமைக்க கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்தை, முன்மொழியப்பட்ட இடத்திலிருந்து, வேறு இடத்திற்கு, மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: