நிர்மலாதேவி வழக்கு ஒத்திவைப்பு

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை நேற்று ஆஜர்படுத்துவதாக இருந்தது. ஆனால், போதிய போலீசார் இல்லாததால் மூவரையும் ஆஜர் செய்யவில்லை. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி, நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: