சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டி: 99-வது சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்

பேசல்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச உள்ளரங்க டென்னிஸ் தொடரில் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் ருமேனிய வீரர் மரியஸ் கோப்பில்-ஐ 7-6, 6-4 என்ற நேர் செட்களில் ரோஜர் பெடரர் வீழ்த்தினார். ஒரு மணிநேரம் 34 நிமிடங்களில் பெடரர் வெற்றியை ருசித்தார். ரோஜர் ஃபெடரரின் சொந்த ஊரான பேசல் நகரில் அவர் வெல்லும் ஒன்பதாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

இந்த வெற்றியையும் சேர்த்து ரோஜர் ஃபெடரர் இதுவரை 99 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அனைத்து நேர ஒற்றையர் பிரிவில் 109 முறை சாம்பியன் பட்டம் வென்று அமெரிக்க வீரர் ஜிம்மி கான்னர்ஸ் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஜிம்மி கான்னர்ஸ்-ன் உலக சாதனையை ஃபெடரர் மேலும் நெருங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: