எத்தியோப்பியாவில் ராணுவ வாகனம் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பலி

எத்தியோப்பியா: எத்தியோப்பியாவில் ராணுவ வாகனத்துடன் மினி பேருந்து மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அம்ஹாரா என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகளுடன் சென்ற மினி பேருந்து எதிரே வந்த ராணுவவாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோரா விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எத்தியோப்பியாவில் சீரற்ற பராமரிப்பு இல்லாத சாலைகள் மற்றும் ஓட்டுநர்களின் அஜாக்ரதையால் சாலைவிபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூலை வரையான 12 மாதங்களில் சுமார் 4,500 பேர் சாலைவிபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: