அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் அமேசானை முந்தியது மைக்ரோசாப்ட்

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மீண்டும் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முந்தய காலாண்டில் அமேசான் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த காலாண்டு முடிவின் படி இழந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் மீண்டும் கைப்பற்றி அமேசானை முன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது.

கடந்த காலாண்டில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. கடந்த மூன்று ஆண்டுகளில் அமேசான் பங்குகள் வீழ்ச்சியடைவது இதுவே அதிகமாகும். தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு $823 பில்லியனாக உள்ளது. அமேசான் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு $805 பில்லியன் டாலராக உள்ளது. இந்த முறையும் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் ஆப்பிள் நிறுவனமே முதலிடம் வகிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: