திமுக மருத்துவர் அணி சார்பில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் திமுக மருத்துவ அணி சார்பில் நடக்கின்றன. இதுகுறித்து திமுக மருத்துவ அணித் தலைவர்   பூங்கோதை ஆலடி அருணா, செயலாளர் என்.வி.என்.சோமு கனிமொழி வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் 27-10- 2018 கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம், 28ம் தேதி திருநெல்வேலி, ஆலங்குளம், முக்கூடல், கன்னியாகுமரி தோவாளை, ஈரோடு கோபி.29ம் தேதி கன்னியாகுமரி ராஜாக்கமங்கலம், விழுப்புரம் நகரம், 31ம் தேதி நாகர்கோவில்,  கோட்டார், ஈரோடு  கோபி, மார்க்கெட், 1ம் தேதி குளச்சல், திங்கள்சந்தை 2ம் தேதி நாகர்கோவில், புத்தேரி, 3ம் தேதி ஈரோடு, 4ம் தேதி சென்னை மாதவரம் ஆகிய இடங்களில் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: