மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: மனோண்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம்

நெல்லை: நெல்லை மனோண்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் கோவிந்தராஜ், கடந்த 10 வருடங்களாக ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு துறை தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி மனோண்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஆடியோ சி.டி.யும், கடிதமும் வந்துள்ளது.

அதில் ஒரு மாணவி, தனக்கு பேராசிரியர் கோவிந்தராஜ் பாலியல் ரீதியாக தொலைபேசியில் தொந்தரவு கொடுப்பதாகவும், மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல்கலைக்கழக விசாரணைக்குழு விசாரணை நடத்தியது. விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்ததை அடுத்து பேராசிரியர் கோவிந்தராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 வருடங்களாகவே ஆராய்ச்சி மாணவர்களுக்கு பேராசிரியர் கோவிந்தராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், ஆனால் இதனை ஆதாரப்பூர்வமாக யாரும் புகாரளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: