பிட்காயின் பரிவர்த்தனைக்கு பெங்களூருவில் ஏடிஎம் திறந்தவர் கைது: இயந்திரம் பறிமுதல்!

பெங்களூரு: நாட்டிலேயே முதல்முறையாக பிட்காயின்கள் பரிவர்த்தனைகளுக்கு நிறுவப்பட்ட ஏடிஎம்-ஐ பறிமுதல் செய்த போலீசார், அதனை நிறுவியவரையும் கைது செய்துள்ளனர். டிஜிட்டல் வடிவில் உள்ள பிட்காயின்கள், இணைய தளங்களில் மட்டுமே பரிவர்த்தனை செய்யப்படுபவை. இருப்பினும் இந்தியாவில் பிட் காயினில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் ஏராளம். வங்கிகள், நிதி நிறுவனங்கள் பிட் காயின் நெட்வொர்க்கில் இடம் பெறுவதற்கு கடந்த பிப்ரவரியில் மத்திய நிதியமைச்சகம் தடை விதித்தது.

இதனால் இந்தியாவில் பிட் காயின்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள கெம்ப் ஃபோர்ட் மாலில், கியோஸ்க் எனப்படும் சிறு வங்கி முறையில், பிட்காயினுக்காக பிரத்தியேகமாக ஏடிஎம் நிறுவப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களது ஐடி-யைப் பயன்படுத்தி பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தாலும், இந்த ஏடிஎம் தொடங்கப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது.

இது குறித்து தகவலறிந்த பெங்களூரு போலீசார், அந்த பிட்காயின் ஏடிஎம்ஐ பறிமுதல் செய்ததோடு, அதனை நிறுவிய ஹரீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். தும்கூரைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர், பெங்களூரு ராஜாஜி நகரில் யுனோகாயின் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். அவரிடமிருந்து, 2 லேப்டாப், மொபைல்கள், யூஎன்ஓ முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், கிரிப்டோ கரண்சி டிவைஸ், சுமார் 2 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: