வர்தா புயலுக்கு பிறகு இயற்கை சூழலில் புதுப்பொலிவுடன் மாறிய வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை: வர்தா புயலுக்கு பிறகு இயற்கை நிறைந்த சூழலில் புதுப்பொலிவுடன் பார்வையாளர்கள் சுற்றி பார்ப்பதற்கு வசதியாக வண்டலூர் உயிரியல்  பூங்கா மாற்றப்பட்டுள்ளது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது.  கடந்த 2016 டிசம்பரில் சென்னையை தாக்கிய  வர்தா புயலால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பூங்காவில் இருந்த விலங்குகள்  மற்றும் பறவைகள் உலாவிடங்கள் நாசமானது. இதனை ஒரு வருடமாக சீரமைத்து வந்த நிலையில், கடந்த ஆண்டும் கனமழை பெய்தது. எனவே,  பூங்காவில் நடந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து, அனைத்து பணிகளும் முடிவடைந்தையடுத்து தற்போது இயற்கை நிறைந்த சூழலில்  பார்வையாளர்கள் சுற்றி பார்ப்பதற்கு வசதியாக  வண்டலூர் உயிரியல் பூங்கா புதுப்பொலிவுடன் மாறியுள்ளது. இதுகுறித்து பூங்கா துணை இயக்குநர் சுதா கூறியதாவது: மனிதர்களை தாக்கும் சக்தி  வாய்ந்த விலங்குகளை கண்காணிப்பதற்காக இந்தியாவிலேயே முதல்முறையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் 98 முதல் 105 இடங்கள் சிசிடிவி  கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்கள் சுற்றி பார்க்கும் இடத்தில் பாதுகாப்புக்காக 33 இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் அடைப்பிடங்களில் 3 பூட்டுகள் போடப்பட்டு விலங்குகள் தப்பிக்காத அளவிற்கு அந்தந்த ஊழியர்கள்  மூலம் பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். வர்தா புயலில் சேதமடைந்த சாலைகள், விலங்குகள், பறவைகளின் கூண்டுகள் முழுமையாக  சீரமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் வசதிக்காக சிறுவர்கள் பூங்கா தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பூங்கா பார்வையாளர்கள்  சுற்றிப்பார்க்க அனைத்து வசதிகளும் முடிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் உள்ளது.இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: