சத்தீஸ்கர் முதல்வருக்கு எதிராக வாஜ்பாயின் உறவினர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு எதிராக போட்டியிடும் வேட்பாளராக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெண் உறவினர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் கருணா சுக்லா. முதலில் அம்மாநிலத்தில் மூத்த பாரதிய ஜனதா தலைவராக இருந்தார். ஒரு கட்டத்தில் கட்சி தலைமைக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டத. இதனையடுத்து கருணா சுக்லா, சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

90 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நவம்பர் 12-ல் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியி்ட உள்ள 12 வேட்பாளர்களை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. இரண்டாம் கட்டமாக, ஆறு வேட்பாளர்களை தற்போது அறிவித்துள்ளது. இதில் ராஜ்நந்த்கான் தொகுதியில் அம்மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு எதிராக கருணா சுக்லா போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மாநில முதல்வருக்கு எதிரான காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கருணா சுக்லா, இதற்கு முன் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஆவார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: