யுஎஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 ரெய்கோனன் சாம்பியன்: ஹாமில்டனுக்கு 3வது இடம்

ஆஸ்டின்: அமெரிக்க கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், பெராரி அணி வீரர் கிமி ரெய்கோனன் சாம்பியன் பட்டம் வென்றார்.சர்க்யூட் ஆப் அமெரிக்காஸ் (ஆஸ்டின்) பந்தயக் களத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மொத்தம் 56 சுற்றுகளை 1மணி, 34 நிமிடம், 18.643 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்த ரெய்கோனன் 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். ரெட் புல் ரேசிங் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+1.281 விநாடி) 2வது இடத்தையும், மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் (+2.342 விநாடி) 3வது இடத்தையும் பிடித்து முறையே 18 மற்றும் 15 புள்ளிகளை பெற்றனர்.

பெராரி அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (+18.222 விநாடி) 4வதாக வந்தார். இதுவரை நடந்துள்ள 18 பந்தயங்களின் முடிவில் ஹாமில்டன் 346 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். வெட்டல் (276), ரெய்கோனன் (221) அடுத்த இடங்களில் உள்ளனர். இன்னும் 3 பந்தயங்கள் எஞ்சியுள்ள நிலையில், உலக சாம்பியன் பட்டம் வெல்ல ஹாமில்டன் - வெட்டல் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: