உலகம் பலவிதம்

மொராக்கோ விபத்து

மொராக்கோ நாட்டின் சிடி போக்நாடலில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் இறந்தனர். 80 பயணிகள் படுகாயமடைந்தனர். தடம்புரண்ட ரயில் உருக்குலைந்து கிடக்கிறது.

குதூகலமடையும் சிறுவர்கள்

ஜெர்மனியின் ஜெல்சென்கிர்சன் மிருகக்காட்சி சாலையில், பாதுகாப்பு கண்ணாடி வழியாக போலார் கரடியைப் பார்த்து குதூகலமடையும் சிறுவர், சிறுமியர்.

மலேசியாவில் தீமிதி விழா

மலேசியாவில் உள்ள சீனர்கள் 9 பேரரசர்களை கடவுளாக பாவித்து ஆண்டுதோறும் விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டு விழாவில் அம்பாங்க் கோயிலில் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்திய சீனர்கள்.

மின்னல் ரயில்

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் ஒளிவெள்ளத்தில் மின்னலென சீறிப்பாய்கிறது பயணிகள் ரயில்.

சரிந்த மனித கோபுரம்

ஸ்பெயினின் டார்ரகோனா நகரில் கேட்டலான் கலாச்சார திருவிழாவில், மனித கோபுரம் அமைக்கும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு விழாவில், பிரமாண்ட மனித கோபுரம் அமைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து, ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: