மீ டூ விவகாரத்தில் சிக்கிய பாலிவுட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கடலில் குதித்து தற்கொலை முயற்சி

மும்பை : மீ டூ பிரச்னை விஷ்வரூபம் எடுத்த பிறகு நடிகைகளால் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாலிவுட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனிர்பென் பிளா தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். தமிழ் மற்றும் இந்தி படவுலகில் மீடு இயக்கம் பெரிய அளவில் புயலை கிளப்பி இருக்கிறது. நடிகர் நானாபடேகர், இயக்குனர் சுபாஷ்காய் உட்பட முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகைகளின் குற்றசாட்டுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் பாலிவுட் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்யும் கம்பெனியான க்வான் எண்டர்டைமெண்ட் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் அனிர்பென் பிளா மீது நான்கு பெண்கள் புகார் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களை அனிர்பென் பாலியல் உறவுக்கு அழைத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அனிர்பென், மேனேஜ்மெண்ட் கம்பெனியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நேற்று முன் தினம் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் தற்கொலைக்கு முடிவு கடிதம் எழுதி வைத்துவிட்டு நவிமும்பை வாஷி கடல் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்.

இது குறித்து மும்பை போலீஸ் இணைகமிஷனர் தேவன் பாரதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் நவிமும்பை வாஷி போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். வாஷி போலீசார் பழைய கடல் பாலத்தை நள்ளிரவு 11.15 மணியில் இருந்து கண்காணித்துக்கொண்டிருந்தனர். இரவு 12.05 மணிக்கு ஒருவர் கடல் பாலத்தின் நடுப்பகுதியில் டாக்சியில் இருந்து இறங்கி கடலில் குதிப்பதற்காக நடந்து சென்றார். அவர் பாலத்தின் தடுப்பில் ஏற முற்பட்ட போது போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை தற்கொலை செய்ய விடாமல் தடுத்தனர். அவரிடம் விசாரித்த போது அவர்தான் அனிர்பென் என்று தெரிய வந்தது. உடனே அவர் வாஷி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரது மனைவியும் வரவழைக்கப்பட்டார். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. நடிகைகளின் புகாரால் தனது கம்பெனி பங்குதாரர்கள் தன்னை கம்பெனியில் இருந்து விலகும்படி நிர்ப்பந்தம் கொடுத்ததாகவும், இதனால் அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை என்றும் போலீசில் தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் எம்.ஜே.அக்பர் அக்.31ல் ஆஜராக உத்தரவு

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி, கசாலா வகாப், ஷிமா ரகா, அஞ்சுபாரதி உள்ளிட்ட பிரபல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது அமைச்சர் பதவியை எம்ஜே.அக்பர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். தன்மீது பாலியல் புகாரை முதலில் கூறிய பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கானது டெல்லி பாட்டியாலா நீதிமன்ற சிபிஐ சிறப்பு நீதிபதி சமர் விஷால் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி உத்தரவில், ‘‘இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறது. இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் மனுதாரர் எம்.ஜே.அக்பர் மற்றும் சாட்சியாளர்கள் ஆகிய அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளிக்க வேண்டும். பின்னர் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: