மத்திய அரசின் ஆற்று சமவெளி ஆணையம் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

சென்னை: மத்திய அரசு புதிதாக ஆற்று சமவெளி ஆணையம் என்பதை கொண்டு வருவதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆற்று சமவெளி மேலாண்மை சட்டத்தை இயற்ற மத்திய அரசு தீர்மானித்திருக்கின்றது.  இதற்கான சட்ட முன்வரைவு, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து திட்டத்தை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆணையம் செயல்பாட்டிற்கு வந்தால், காவிரி மேலாண்மை ஆணையம் செல்லா காசாகிவிடும் என்று தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவிரி உள்ளிட்ட 13 ஆறுகளின் நீர் பகிர்வு சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த புதிய ஆணையம் அமைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் பிரச்னைக்குரிய மாநிலங்களின் முதல்வர்களில் ஒருவர் சுழற்சி முறையில் தலைவராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவர உள்ள ஆற்று சமவெளி ஆணையம் காவிரி பிரச்சனைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது. இந்த மசோதாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் துவக்க நிலையிலேயே எதிர்க்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: