4ம் கட்ட அகழாய்வு நிறைவு கீழடியில் ஆய்வுக்குழிகள் மூடல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து ஆய்வுக்குழிகள் நேற்று மூடப்பட்டன.

சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் மத்திய தொல்லியல்துறை சார்பில் 3 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. ஏப். 18ம் தேதி முதல் நான்காம் கட்ட ஆய்வில் தமிழக தொல்லியல்துறையினர் ஈடுபட்டனர். இதில் 34 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. அப்போது  6 தங்க ஆபரணங்கள் உள்பட சுமார் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தப்பணி கடந்த மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அனைத்து குழிகளும் அடையாளம் மற்றும் அளவீடு செய்த பின் மூடும் பணி நேற்று நடைபெற்றது. இக்குழிகள் முறையான பாதுகாப்புடன் மூடப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்  ஐந்தாம் கட்ட அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: