ஜடாயு தீர்த்த கட்டத்தில் தவறவிட்ட தாலிசெயினை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்

நெல்லை: புஷ்கர விழாவில் பங்கேற்ற பெண், தாலி செயினை நீரில் தவறவிட்டார். போலீசார் உடனடியாக அதை மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.தாமிரபரணி புஷ்கர விழா  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்  கடந்த 11ம்தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 5வது நாளான இன்று ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், தாமிரபரணி தீர்த்த கட்டங்களில் புனிதநீராடி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி கலைவாணி(35) என்பவர் புஷ்கர விழாவில் பங்கேற்க நெல்லை வந்தார்.

இன்று காலை நெல்லை அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் புனிதநீராடினார். அப்போது அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலிசெயின் நீரில் மூழ்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டு கதறினார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் காவலர்கள் முத்துப்பாண்டி, கார்த்திக்ராஜா, மணிவேந்தன் ஆகியோர் உடனடியாக ஆற்றுநீரில் இறங்கி மாயமான தாலி செயினை மீட்டு கலைவாணியிடம் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: