பூஸ்டர் இன்ஜின் செயல்படவில்லை விண்ணில் ஏவியபோது நடுவானில் சோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்

மாஸ்கோ: சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்ட சோயுஸ் ராக்கெட்டில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், அதில் சென்ற 2 விண்வெளி வீரர்கள் கேப்சூல் விண்கலத்தை இயக்கி கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கினர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹாக், ரஷ்ய வீரர் அலெக்சே ஓவ்சினின் ஆகியோர் நேற்று விண்ெவளிக்கு புறப்பட்டனர். ரஷ்யாவின் பைகானூர் மையத்தில் இருந்து கேப்சூல் விண்கலம் மூலம் சோயுஸ் ராக்கெட்டில் அவர்கள் புறப்பட்டனர். ஏவுதளத்திலிருந்து சோயுஸ் ராக்கெட் ஏவப்பட்டதும், பூஸ்டர் ராக்கெட்டின் முதல் நிலை பிரிந்தது. 2வது நிலையில் பூஸ்டர் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு அணைந்தது.

இதனால் சோயுஸ் விண்கலத்தால் மேல் நோக்கி பயணிக்க முடியவில்லை. ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விண்வெளி வீரர்கள், கேப்சூல் விண்கலத்தை ராக்கெட்டில் இருந்து பிரித்து, அதை அவசரமாக தரையிறங்கும் நடவடிக்கையில் இறங்கினர்.  ‘பேலிஸ்டிக் டெசன்ட் முறையை’ பயன்படுத்தி அவர்கள் தரையிறங்கினர். இந்த முறையை பயன்படுத்தி தரையிறங்கும்போது, விண்கலம் வழக்கமாக தரையிறங்கும் கோணத்தை விட, மாறுபட்ட கோணத்தில் வேகமாக தரையிறங்கும். எனினும், வீரர்கள் இருவரும் பத்திரமாக தரையிறங்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: